பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் தந்தை நாராயண் லால் நட்டா சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள விஜய்பூரில் வசித்துவருகிறார். இந்நிலையில், நாராயண் லால் நட்டாவுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர், சிகிச்சைக்காக சந்த்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, நாராயண் லால் நட்டாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.