டெல்லி: கனையா குமாருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் மார்ச் 15ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கனையா குமார், உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டார்ச்சார்யா உள்ளிட்டோர் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக புகாரளித்த ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்த மகேஷ் கிரி டெல்லி வசந்த் கஞ்ச் (வடக்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கனையா குமார் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் மீது 124A (தேசவிரோதம்), 323, 471, 143,149, 147 மற்றும் 120B ஆகிய பிரிவுகளின் கீழ் 2016 பிப்ரவரி 11ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 36 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. அதில், காஷ்மீர் மாணவர்களான அயூப் உசேன், முஜிப் உசேன், முனிப் உசேன், உமர் குல், ரயீசா ரசூல், பஷீர் பட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் டி. ராஜா மகள் அப்ரஜிதா, ஷீலா ராஷித் (ஜேஎன்யூ துணை தலைவர்), ராம நாகா, அசுதோஷ் குமார், பனோஜ்யட்சனா லாகிரி ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
இந்நிலையில், வழக்கில் ஆஜராக தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் பங்கஜ் சர்மா, கனையா குமாருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசதுரோக வழக்கை அரசு தவறாக பயன்படுத்துகிறது- கனையா குமார்