ஹைதராபாத்: ஆகஸ்ட் 10-ஆம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியானது ஜெயிலர் திரைக்கு வந்தது. உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நெல்சனுக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
டாக்டர் படத்தின் டார்க் காமெடி மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த பீஸ்ட் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. பீஸ்ட் படத்தின் மூலம் நெட்டிஷன்கள் அடுக்கிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜெயிலர் படத்தில் தன் ரீ-எண்டிரீயை உறுதி செய்துள்ளார் நெல்சன். இதனால் ”நீ ஜெயிச்சிட்ட மாறா” என ஜெயிலர் படத்திற்கு கமெண்ட்ஸ்களை பறக்க விட்டனர்.
இந்தப் படம் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்தை தவிர்த்து, கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள முன்னனி நடிகர் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி என ஏராளாமானோரின் நடிப்பு பட வெற்றிக்கு பலமாக அமைந்தது.
தமிழ்நாட்டில் ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 25 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 18 நாட்களில் இந்தியாவில் 315.45 கோடிக்கும் வசூலித்து சாதனை படைத்துள்ளது. திரையரங்கு கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்ன்கின் தகவலின் படி தமிழ் திரையுலகில் தொடர்ந்து 18-வது நாளையடுத்து, 59.42% திரையரங்குகள் நிறைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் திரைப்படம் இயக்குநர் நெல்சனுக்கு மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தக்கும் பெரும் சவாலாக இருந்தது. அண்ணாத்த படத்தின் பெரும் தோல்வியே இதற்கு வலுவான காரணமாக அமைந்தது. படம் அமோக வெற்றி பெற்றிருந்தாலும் நெட்டிஷன்களின் ட்ரோலில் இருந்து வழக்கம் போல் நடிகர் தப்பவில்லை என்றே சொல்லலாம்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்ட சர்ச்சைக்குள்ளான நிலையில், படத்தின் வெற்றி மறந்து நெட்டிஷன்கள் அவரை ட்ரோல்கள் மூலம் துவம்சம் செய்தனர். இதனால் சர்ச்சையின் மன்னன் வரிசையிலும் நீங்காத இடத்தை தக்க வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், தற்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 'தலைவர் 170' படத்தை 'ஜெய் பீம்' திரைப்படத்தின் பிரபல இயக்குநர், டி.ஜே.ஞானவேல் இயக்க உள்ளதாகவும் மேலும் இதில் ஒரு இஸ்லாமிய காவல் அதிகாரியாக நடிகர் ரஜினி நடிக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Jailer: தலைவர் படம்னா ஜாக்பாட் தான்... ஜெயிலர் பட வசூல் இவ்வளவா?