ETV Bharat / bharat

ஜஹாங்கீர்புரி வன்முறை; முக்கிய குற்றவாளி பாஜக பிரமுகர்! - பாஜக

ஜஹாங்கீர்புரி வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி அன்சார் பாஜக பிரமுகர் என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

Jahangirpuri Violence
Jahangirpuri Violence
author img

By

Published : Apr 20, 2022, 6:43 AM IST

புது டெல்லி: ஏப்.16ஆம் தேதி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் வன்முறை வெடித்தது.

ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது சிலர் மறைந்திருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  • जहाँगीरपुरी दंगों का मुख्य आरोपी- अँसार- भाजपा का नेता है। उसने भाजपा की प्रत्याशी संगीता बजाज को चुनाव लड़वाने में प्रमुख भूमिका निभायी और भाजपा में सक्रिय भूमिका निभाता है

    ये साफ़ है कि भाजपा ने दंगे करवाए। भाजपा दिल्ली वालों से माफ़ी माँगे।

    भाजपा गुंडों-लफ़ंगों की पार्टी है pic.twitter.com/BcjifgTmWx

    — Atishi (@AtishiAAP) April 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், ஜஹாங்கீர்புரி வன்முறையில் ஈடுபட்டத்தில் முக்கிய குற்றவாளி அன்சார் பாஜக பிரமுகர் என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து புகைப்பட ஆதாரங்களை ட்விட்டரில் பகிர்ந்து ஆம் ஆத்மி பிரமுகர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதில், “பாஜக வேட்பாளர் சங்கீதா பஜாஜை தேர்தலில் போட்டியிட வைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கலவரத்தை பாஜக செய்தது. இந்த விவகாரத்தில் டெல்லி மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும், பாஜக குண்டர்களின் கட்சி” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜஹாங்கீர்புரி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக அன்சார் ஏப்.17ஆம் தேதியே காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஜஹாங்கீர்புரி வன்முறை; 14 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.