டெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "நாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாஜக உழைக்கிறது என்பதை குஜராத் தேர்தல் முடிவுகள் நியாயப்படுத்திவருகிறது. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக யாருமில்லை என்ற எங்களது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
குஜராத்தில் புதிய சாதனையை உருவாக்குகிறோம். குஜராத் மாநில மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர். இது நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும்" எனத் தெரிவித்தார். அதோடு, இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலைக்கு வரும் என்றும் தெரிவித்தார். குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், தற்போது வரை 148 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க: குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்