ETV Bharat / bharat

Aditya L1 Launch: ஆதவனை ஆராயும் பயணத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம்..! - ஆதவனை ஆராயும் பயணத்தில் ஆதித்யா எல் 1

விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலமானது வெற்றிகரமாக இன்று (செப். 2) விண்ணில் செலுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்தது.

Etv Bharat ஆதவனை ஆராயும் பயணத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 5:44 PM IST

Updated : Sep 2, 2023, 7:27 PM IST

ஆதவனை ஆராயும் பயணத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம்

சென்னை: சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1, இன்று (செப்.2) காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட 64ஆவது நிமிடத்தில், 648.71 கி.மீ தொலைவில் பூமியின் தாழ்வு வட்ட பாதையில் வெற்றிகரமாக விடுவிக்கபட்டது.

நாசா, ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளி மையங்கள் வரிசையில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பிய 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 வெற்றி இந்தியா நாடு முழுவதும் எழுந்திருக்கிறது.

நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை இன்று அனுப்பியது. நெருப்பு பந்தான சூரியனை எப்படி விண்கலம் விண்ணில் இருந்து சூரியனை ஆராய போகிறது என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் இஸ்ரோ (ISRO) அதற்குண்டான விளக்கம் அளித்தது. அதாவது, ஆதித்யா எல்-1 விண்கலமானது விண்வெளியில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்ச பாயிண்ட் என்னும் எல்-1 பாயிண்டில் நிலைநிறுத்தி சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தரப்பிலும் மற்றும் பல்வேறு விஞ்ஞானிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுபோய் நிலை நிறுத்தப்படத்தது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியன் நோக்கி நகர்த்தி பயணப்பட தொடங்கும். பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ராஞ்சியன் புள்ளி 1’ என்பது தான் அதன் இலக்கு.

முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 100முதல் 120 நாட்களுக்கு ஆகும் என்று முன்னதாகவே இஸ்ரோ தெரிவித்திருந்தது.

ஆதித்யா எல்-1ன் 7 முக்கிய கருவிகள்:

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ) கருவிகள் உள்ளன.

மேலும், சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. சந்திரயாந்3ஐ தொடர்ந்து இஸ்ரோ விண்வெளியில் தன்னுடைய அடுத்த மைல் கல்லை எட்டியுள்ளது.

இதையும் படிங்க: Aditya L1 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்1!

Last Updated : Sep 2, 2023, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.