ETV Bharat / bharat

விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்! - ஜிஎஸ்எல்வி எஃப் 12

போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 என்ற செயற்கைக்கோளுடன் 'ஜிஎஸ்எல்வி எஃப்-12' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 29, 2023, 9:36 AM IST

Updated : May 29, 2023, 7:52 PM IST

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து காலை 10.42 மணிக்கு 'ஜிஎஸ்எல்வி எஃப் -12' ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது. தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) முடிவு செய்தது.

அதன்படி, 1,420 கோடி ரூபாய் செலவில் ஐஆா்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் செயலிழந்த செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‘ஐஆா்என்எஸ்எஸ் 1-ஜி’ செயற்கைக்கோளுக்கு மாற்றாக ‘என்விஎஸ்-01’ செயற்கைக்கோளை இஸ்ரோ(ISRO) வடிவமைத்தது.

இதையும் படிங்க: மருத்துவராக மாறிய நோயாளிகள்.. அரக்கோணம் அரசு மருத்துவமனை அவலம்!

‘என்விஎஸ்-01’ செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சோ்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் உரிமம் ரத்து; 550 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது? - சி.விஜயபாஸ்கர் கேள்வி

Last Updated : May 29, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.