ஐதராபாத் : ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டு புவிவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.
சூரியனை ஆராயும் திட்டத்தில் களமிறங்கி உள்ள இஸ்ரோ, அதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி உள்ளது. சூரியனின் புறவெளிப் பாதையை ஆய்வு செய்ய வகையில் இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (செப். 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
பல்வேறு அடுக்குகளாக பிரிக்கப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் இறுதியாக புவி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார். இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : Aditya L1 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்1!