ETV Bharat / bharat

தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை.. இஸ்ரேல் வாழ் இந்தியர் ஈடிவி பாரத்திற்கு பகிர்ந்த பரபரப்பு தகவல்! - terrorist attacks

israel hamas war: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் குறித்து, இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியா வம்சாவளியான அவ்ரஹாம் போர் சூழல் குறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்களை பார்க்கலாம்..

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் குறித்து விவரிக்கும் இந்திய வம்சாவளி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 7:14 PM IST

ஹைதராபாத்: ஆண்டுகள் கடந்து நீடித்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். கடந்த அக்.7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதப்படையினர் இஸ்ரேல் மீது திடீரென தொடர்ந்த தாக்குதலால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒருநேரத்தில் 5,000 ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரேலில் 20 நிமிடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதப்படையினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீனம் மீது போரை அறிவித்தது இஸ்ரேல். பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கும் குறிப்பிட்ட சில நாடுகள் ஹமாஸ் ஆயுதப்படையினருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இது குறித்து இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியரான அவ்ரஹாம் கூறுகையில், "ஹாசா படையின் தாக்குதலால் ஒவ்வொரு மக்களும் அவரவர் வீட்டின் பதுங்கு குழிக்குள் சென்று தஞ்சமடைந்தோம். உணவு, தண்ணீர் என எதுவும் இல்லாமல் உயிரை காப்பாற்றிக் கொள்ள பதுங்கி இருந்தோம். அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ சைரன் ஒலிக்காக மட்டுமே காத்திருந்தோம். எப்போது எது நடக்கும் என்ற சொல்ல முடியாத பதற்றமான சூழலே அங்கு நிறைந்திருந்தது" என்று போரில் உயிர் தப்பிய இந்தியரான அவ்ரஹாம் தெரிவித்துள்ளார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட அவ்ரஹாம், 15 வருடமாக மும்பை உமர்கடி பகுதியில் வசித்து வந்துள்ளார். பின்னர் இஸ்ரேல் நாட்டிலுள்ள டிமோரா பகுதிக்கு குடிப்பெயர்ந்ததாகத் தெரிவித்தார். இந்நாட்டு மக்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்களோ என்னவோ தெரியவில்லை, நாட்டில் ஏற்படும் இக்கட்டாண சுழலில் உயிர்தப்புவதற்கும், அவர்களை தற்காத்துக் கொள்வதற்கும் பதுங்கு குழிகளை கட்டி வைத்துள்ளனர். நாட்டின் பதற்ற சூழலை முன்கூட்டியே கணித்து இப்படியான செயல்முறைகளை மேற்கொண்டது இந்த சூழலில் எங்களுக்கு எங்கள் உயிரை காப்பாற்றுவதற்கான சிறந்த வழியாக இருந்தது" என்கிறார் அவ்ரஹாம்.

பங்க்கர்(Bunker) என்றால் என்ன?

அதாவது நம் முன்னோர்கள் போர் காலங்களில் பயன்படுத்துவதற்காக சுரங்கப் பாதைகளை அமைத்து வந்தனர். அந்தக் காலக்கட்டங்களில் சுரங்கப்பாதைகள் இல்லாத ராஜ்ஜியமே இல்லை என்று கூட சொல்லலாம். இப்படி தாக்குதலில் இருந்து தங்களை தாங்களே தற்காத்து கொள்ள அமைக்கப்படுவதே இந்த பங்க்கர் முறையாகும்.

இந்த முறை, வெளிநாடுகளில் சற்று மாறுபட்டு பதற்றம் நிறைந்த நாடுகளில் எப்போது கலவரம் உருவாகும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் பதற்றம் உருவாகும் சூழலில், பொது மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து, வீட்டின் தரை பகுதியில் ரகசியமாக கட்டப்பட்டிருக்கும் இந்த பங்க்கரின் அடியில் சென்று உயிர்பிழைத்து கொள்கின்றனர். இஸ்ரேலில் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் பங்க்கர்கள் இருப்பது வழக்கம்.

மும்பையை பிறப்பிடமாகக் கொண்ட நான், "சைரன் சத்தங்களும், பங்க்கர் பற்றி அதிகளவில் அறிந்திராமல் இருந்தேன். ஆனால், இஸ்ரேலில் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டிருந்த சைரன் மற்றும் பங்க்கர்களின் முக்கியத்துவம் குறித்து இந்த பதற்ற சூழல் எனக்கு கற்றுகொடுத்துவிட்டது. உயிர் தற்காப்பதற்கு பங்க்கரும், எச்சரிக்கைக்காக சைரன் ஒலிகளும் இல்லாமல் போயிருந்தால், எங்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என தெரியவில்லை" என்கிறார் அவ்ரஹாம்.

தொடர்ந்து பேசிய அவர், "இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதல் அக்.7 ஆம் தேதி சனிக்கிழமை காலை 6.30 மணி அளவில் தொடங்கப்பட்டது. பொது மக்கள் யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் இந்த தாக்குதல் நடந்ததால், வீதிகள் முழுவதும் ஆங்காங்கே அதிகாரிகளின் சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன. அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கைகள் வலுத்தன. அப்போது 22 பேர் கொண்ட ஹமாஸ் ஆயுதப்படையினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். பின்னர் ஹமாஸ் ஆயுதப்படை அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ரானுவப் படையினர் தயாராகினர்.

அதிகாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்குப் பிறகு, எச்சரிக்கைக்காக எங்களுக்கு இருமுறை சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன. டிமோரோ நகரம், தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்ரேல் பகுதி அதாவது காஸா எல்லை பகுதியில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருப்பதனால், பாதிப்புகள் சற்று குறைவாகவே இருந்தது. என்னதான் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் தாக்குதலின் வேகம் பொதுமக்களிடையே பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் கணக்கை கடந்து பலமடங்கு அப்பாவி பொது மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

நாங்கள் டிமோரா நகரத்திற்கு 1969 ஆம் ஆண்டு குடிப்பெயர்ந்தோம். நாங்கள் இங்கு குடியேறும் போது ஏறத்தாழ 30 ஆயிரத்தை ஒட்டியே மக்கள்தொகை இருந்தது. பின்னர், கணிசமாக மக்கள்தொகை அதிகரிக்கச் செய்தது. இங்கு வசிக்கும் யூதர்களால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'சப்பாத்' என்ற திருவிழா நடப்பது வழக்கம். இந்த திருவிழா ஒவ்வொரு வெள்ளி கிழமையில் தொடங்கி 24 மணி நேரத்திற்கு சனிக்கிழமை வரையிலும் கொண்டாடப்பட்டு வரும். இந்த திருவிழாவின் போது யூதர்கள், பயணம் மேற்கொள்ளுதல், சாப்பிடுவது, ஏன் அவர்களின் வீட்டைவிட்டுக்கூட வெளி வரமாட்டார்கள். யூதர்கள் அன்று எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். அன்று அவர்களின் மதம் சார்ந்த வேதங்களை வாசித்து அவர்களின் மதப் போதனையில் ஈடுபடுவர்.

இந்த வாய்ப்பை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது ஹமாஸ் ஆயுதப்படை அமைப்பு. பொது மக்கள் வழிபாட்டிற்காக அவரவர் வீட்டில் இணைந்த போது, சனிக்கிழமை காலையில் இந்த வெறிச்செயலை செயல்படுத்தி பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பல பெண்கள், குழந்தைகள் என பலரின் உயிர்களை பலிவாங்கியுள்ளனர்.

மேலும் இது மட்டுமின்றி, யூதர்கள் சிலர் காஸா எல்லைப் பகுதியில், சப்பாத் திருவிழாவிற்காக கச்சேரி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்தக் கச்சேரி வெள்ளிக் கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை நடைபெற்றது. இந்தக் கச்சேரியில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹமாஸ் ஆய்தப்படையினரால் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்தத் தாக்குதலால், இஸ்ரேலைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், வீட்டில் ஒருவர் ஹமாஸ் ஆயுதப்படையினருக்கு எதிராக நடக்கவிருக்கும் போரில், பங்கேற்க வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. இதையடுத்து என் இரு மருமகன்கள் இந்தப் போரில் பங்கேற்கின்றனர். எங்கள் உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் போராடி வரும் எங்கள் ராணுவ வீரர்களின் வெற்றியை உறுதிபடுத்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் ஒட்டுமொத்த இஸ்ரேலியர்களும் ஒற்றுமையுடன் ஹமாஸ் ஆயுதப்படையினருக்கு எதிராக போராட உள்ளோம். இது ஒட்டுமொத்த இஸ்ரேலியர்களின் மன உறுதியை வெளிப்படுத்துகிறது" என உருக்கமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர்! 1,100 பேர் பலி! என்ன நடக்கிறது இஸ்ரேலில்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.