ETV Bharat / bharat

கேந்திரிய வித்யாலயாவில் தமிழுக்கு இடமில்லையா? - வைகோ கண்டனம்! - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா

இந்திக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து தமிழை புறக்கணித்தால் நாட்டின் ஒருமைப்பாடு சிதையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

vaiko
vaiko
author img

By

Published : Feb 10, 2021, 1:15 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக ஆசிரியர்களை நியமித்து 6 முதல் 10 ஆம் வகுப்புகள் வரை கற்றுத் தரலாம் என்றும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 ல் கூறப்பட்டுள்ளது. 2013 -14 ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஓர் வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநில அரசின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பதை கடுமையாக கண்டித்திருந்தேன்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6 லிருந்து 7ஆம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்றும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை மொழிப் பாடமாக எடுத்து மாணவர்கள் படிக்க முடியாது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது. பாஜக அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்தி, சமஸ்கிருத திணிப்பில் தீவிரமாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையும், இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தையும், சம வாய்ப்பையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். இல்லையேல், நான் நீண்ட காலமாக கூறி வருவதைப் போல் இந்திய ஒருமைப்பாடு என்பது வினாக்குறி ஆகும். எனவே தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க உரிய ஆசிரியர்களை நியமனம் செய்து, தாய்மொழிக் கல்வி கற்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சாலைப் பாதுகாப்பு மாதம் கொண்டாடும் நாம் அதனை மதிக்கிறோமா? - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.