கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இந்திய - நேபாள எல்லை கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லையைத் திறக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, நேற்றுமுதல் இந்திய - நேபாள எல்லை திறக்கப்பட்டது. சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நுழைய வேண்டுமானால், சமீபத்தில் எடுத்த கரோனா தொற்று பரிசோதனை அறிக்கையைக் கொண்டுசெல்ல வேண்டும். மேலும், நான்கு சக்கர வாகங்களுக்கு 500 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாயும் சுங்க வரியாக வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!