ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சூடு வீராங்கனை தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.
இந்த நிகழ்வின் இறுதிப் போட்டியில் 252.2 புள்ளிகள் குவித்து இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்க பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பிரான்சின் ஓசியான் முல்லர் 251.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும், சீனாவின் ஜியாலே ஜாங் 229 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை கைபற்றினார்.
-
🇮🇳's ⭐shooter, @elavalarivan makes the country proud AGAIN, as she wins a memorable🥇at #Shooting🔫World Cup, Rio🇧🇷 🥳
— SAI Media (@Media_SAI) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The #TOPSchemeAthlete with 252.2 pts in the Final of Women's 10m Air Rifle event won 🇮🇳's 1⃣st🏅in this edition of Shooting World Cup. This is her 2⃣nd 🥇 in… pic.twitter.com/vuKtnmknag
">🇮🇳's ⭐shooter, @elavalarivan makes the country proud AGAIN, as she wins a memorable🥇at #Shooting🔫World Cup, Rio🇧🇷 🥳
— SAI Media (@Media_SAI) September 16, 2023
The #TOPSchemeAthlete with 252.2 pts in the Final of Women's 10m Air Rifle event won 🇮🇳's 1⃣st🏅in this edition of Shooting World Cup. This is her 2⃣nd 🥇 in… pic.twitter.com/vuKtnmknag🇮🇳's ⭐shooter, @elavalarivan makes the country proud AGAIN, as she wins a memorable🥇at #Shooting🔫World Cup, Rio🇧🇷 🥳
— SAI Media (@Media_SAI) September 16, 2023
The #TOPSchemeAthlete with 252.2 pts in the Final of Women's 10m Air Rifle event won 🇮🇳's 1⃣st🏅in this edition of Shooting World Cup. This is her 2⃣nd 🥇 in… pic.twitter.com/vuKtnmknag
இதனை தொடர்ந்து இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) இளவேனில் வெற்றி பெற்ற செய்தியை தனது X தலத்தில் பகிர்ந்து உள்ளது. சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23ம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் கலந்து கொள்வதற்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் ரியோ உலகக் கோப்பை தொடரை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- — SAI Media (@Media_SAI) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— SAI Media (@Media_SAI) September 16, 2023
">— SAI Media (@Media_SAI) September 16, 2023
இந்நிலையில் அஜர்பைஜானில் உள்ள பாகு பகுதியில் ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கான மே ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக் கோப்பையில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
2023 இல் இதுவரை நடைபெற்ற ISSF துப்பாக்கிச் சூடு போட்டிகளில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஏழு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று உள்ளனர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்திய வீரர்கள் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.