ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரிகள் இருவர் சுமார் ரூபாய் 16 கோடி மோசடி செய்தாக கூறி, அவர்களுக்கு எதிராகக் குற்ற வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனமான ஆக்ரா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா பிஸ்வாஸ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காகக் கடந்த 2017ஆம் ஆண்டு தோனியை அணுகியதாகவும், உரிமைக் கட்டணத்தைச் செலுத்தி, லாபத்தில் 70:30 என்ற அடிப்படையில் பகிரப்படும் என்று ஒப்புதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனை மற்றும் விதிமுறைகளை ஆக்ரா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. அதனால், இது குறித்து பலமுறை நினைவூட்டியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், ஆக்ரா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகார கடிதத்தை தோனி திரும்பப் பெற்றார்.
இருப்பினும், ஆக்ரா ஸ்போர்ட்ஸ் தொடர்ந்து தோனி பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு எவ்வித பணம் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், ஆக்ரா ஸ்போர்ட்ஸ் எவ்வித பதிலும் தெரிவிக்காததால், அவர்களால் தனக்கு 16 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாகக் கூறி, நீதிமன்றத்தில் தோனி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக 2023 அக்டோபர் 27 ஆண்டு ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்பு குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தோனி அங்கிரிக்கப்பட்ட நபரான சிமந்த் லோஹானி, இன்று (ஜன.05) மாஜிஸ்திரேட் முன்பு தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி!