ETV Bharat / bharat

கரோனா: ஒரேநாளில் 2 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் - கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 71 பேர், கரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.

COVID-19
கரோனா
author img

By

Published : Jun 4, 2021, 10:04 AM IST

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 364 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 85 லட்சத்து 74 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 3) ஒரேநாளில் 24 ஆயிரத்து 405 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும். அடுத்தப்படியாக கேரளா மாநிலம் உள்ளது. அங்கு, 18 ஆயிரத்து 853 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 3) 2 ஆயிரத்து 713 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 40 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 655 ஆக உள்ளது. தற்போது 16 லட்சத்து 35 ஆயிரத்து 993 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதுவரை, மொத்தமாக 22 கோடியே 41 லட்சத்து ஒன்பது ஆயிரத்து 448 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.