ஹைதராபாத்: இந்தியாவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99.79 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,890 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 1,44,789 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 95,20,827 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, இதுவரை 15,89,18,646 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: '30 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் இந்தியா'