உலகப் பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், இந்தியா தனது பங்களிப்பாக பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் மேற்கொண்டுவருகிறது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியும், பாரத் பயோட்டெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பல நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் இலவசமாகவும், சில நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும் அனுப்பிவைக்கப்படுகிறது. அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைகளுக்கு இந்தியா நல்லெண்ண அடிப்படையில் தடுப்பூசி அனுப்பிவைக்கிறது.
ஐநா அமைதிப்படை வீரர்கள் 2 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தார்.
பிறரின் நன்மையை மனதில் வைத்து எப்போதும் செயல்படவேண்டும் என்ற கீதையின் தத்துவத்தை அடிப்படையாக வைத்து இக்கட்டான சூழலில் பணியாற்று வீரர்களுக்கு இந்தியா உதவி அளிக்கவுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை: தமிழிசை