ETV Bharat / bharat

India Corona : புது உச்சம் தொட்ட கரோனா பரவல் - ஊரடங்கு கட்டுப்பாடு? - India coronavirus

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. 8 மாதங்களில் இல்லாத அளவாக மீண்டும் பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

Corona
Corona
author img

By

Published : Apr 20, 2023, 2:35 PM IST

டெல்லி : கடந்த சில நாட்களாக நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 591 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 542 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

8 மாதங்களுக்கு பின் நாட்டில் மீண்டும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது. ஏறத்தாழ 65 ஆயிரத்து 286 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரவல் விகிதம் 0.14 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலி எண்ணிக்கை பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளுக்கு நாள் பரவல் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தாண்டும் நிலையில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் நிலவுகிறது.

முக கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறு, பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா! வீட்டில் தனிமைபடுத்தப்பட்டார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.