புதுச்சேரியில் காங்கிரஸ்க்கு 15 தொகுதியும், திமுகவிற்கு 13, கூட்டணி தொகுதியான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கிடு செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று (மார்ச் 13) திமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்கிடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 14) புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆய்வுக்குழு தலைவர் திக் விஜய் சிங், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, புதுச்சேரி மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல், திமுகவிற்கு ஒதுக்கியதைக் கண்டித்து, மங்கலம் தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது தொண்டர் ஒருவர் திமுக கட்சி கொடியை எடுத்து கொண்டு கட்சி தலைவர் ஏவி சுப்ரமணியன் மீது போர்த்துவதற்கு நிர்வாகியிடம் வந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் தடுத்து இது கூட்டணியில் எடுத்த முடிவு என விளக்கமளித்தார். மங்கலம் தொகுதியைச் சேர்ந்த ரகுபதிக்கு சீட் ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் தொண்டர்கள் கோஷ மிட்டதால், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து இந்த கைகலப்பு, ரகளை காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளை, பதற்றம் காரணமாக துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு