ETV Bharat / bharat

நடனமாட மறுத்ததாக சிறுமியை தீ வைத்து கொல்ல முயற்சி .. பீகாரில் கொடூரம்! - நடனமாட மறுத்த சிறுமி தீ வைத்து கொலை முயற்சி

பீகாரில் திருமண விழாவில் கூட ஆட மறுத்த சிறுமியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை முயற்சி
கொலை முயற்சி
author img

By

Published : Jan 19, 2023, 10:24 PM IST

பீகார்: திருமண விழாவில் கூட ஆட மறுத்ததாக, 6ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். பீகாரின், வைசாலி மாவட்டம், ராஜபாக்கர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த பூஜா நிகழ்ச்சியில் பெண்கள், சிறுமிகள் எனப் பலர் நடனமாடி கொண்டாடினர். நடன நிகழ்ச்சியில் திடீரென குறுக்கிட்ட உள்ளூர் இளைஞர்கள், தங்களோடு நடனமாடுமாறு பெண்களை வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஆண்களை வெளியேறுமாறு பெண்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

தங்களை இழிவுபடுத்திய பெண்களை பழிவாங்க இளைஞர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. தங்களுக்கு எதிராக கோஷமிட்ட பெண்கள் கூட்டத்தில் இருந்த சிறுமியை இளைஞர்கள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட சிறுமி இளைஞர்களிடம் இருந்து தப்பி, தன் பாட்டி வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மறுநாள் காலை வீட்டைவிட்டு வெளியே வந்த சிறுமியை வாயை பொத்திய இளைஞர்கள் கடத்திச்சென்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆத்திரம் அடங்காத இளைஞர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோலை சிறுமியின் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஊர் மக்கள், அவளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமி அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான இளைஞர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Delhi: காரில் மீண்டும் தரதர சம்பவம் - மகளிர் ஆணையத் தலைவருக்கே நடந்த கொடுமை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.