ETV Bharat / bharat

சாலையில் வைத்து பிரார்த்தனை.. உ.பி.யில் இஸ்லாமிய மதகுரு கைது! - உத்தர பிரதேசத்தில் இமாம் கைது

உத்தர பிரதேசத்தில் சாலையில் வைத்து தொழுகை நடத்தியதாக இஸ்லாமிய மத குருவை போலீசார் கைது செய்தனர்.

imam
imam
author img

By

Published : Jul 16, 2023, 9:58 PM IST

முசாபர்நகர் : உத்தர பிரதேசத்தில் சாலையில் வைத்து தொழுகை நடத்தியதாக இஸ்லாமிய மத குருவை போலீசார் கைது செய்தனர். உத்தரபிதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சாலையோரம் வைத்து இஸ்லாமிய மத குரு தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இஸ்லாமிய மத குருவை போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட இஸ்லாமிய மத குருவின் பெயர் மவுலானா நசீம் என்றும், ரஹ்மான் மசூதியில் இமாமாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

மவுலானா நசீமுடன் இணைந்து வீடியோவில் சிலர் தொழுகையில் ஈடுபட்டதாகவும் 25 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் உஸ்மா பிரவீன் ஹுசைன் கஞ்ச் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ஹுசைன் கஞ்ச் மெட்ரோ நிலையத்தில் தொழுகையில் ஈடுபட்ட புகைப்படத்தை உஸ்மா பிரவீன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உஸ்மா பிரவீன் தான் பிரார்த்தனை செய்யும் இடத்தை விதான் பவன் என தவறாக காட்டியதாகவும், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து உஸ்மா பிரவீன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : Bengaluru Opposition meeting : திமுக, காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு - தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.