ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் நேற்று (மார்ச் 29) பயங்கரவாதிகள் நகராட்சி அலுவலகத்தில் நடத்திய தாக்குதலில் இரண்டு கவுன்சிலர்கள், ஒரு காவலர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்த நான்கு பாதுகாப்புப் படையினர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்த ஜம்மு காஷ்மீர் காவல் தலைவர் விஜய் குமார், இந்தச் சம்பவத்திற்குப் பாதுகாப்பு குறைபாடே காரணம் என வருத்தம் தெரிவித்தார்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கரவாதி முதாசிர் என்பவர்தான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளதாகவும், இதில் தொடர்புடைய ஆஷிக் பன்டித் என்ற நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். முக்கியக் குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அதை மட்டும் செய்யாதீங்க - தொண்டரின் காலில் விழுந்த மோடி!