ஹைதராபாத்: இலங்கை கிரிக்கெட்டில் (SLC) இலங்கை அரசாங்கத்தில் தலையீடு இருப்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இலங்கை அணியை இடை நீக்கம் செய்துள்ளது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட்டை (SLC) கலைப்பதாகத் தெரிவித்தது.
-
Sri Lanka Cricket suspended by ICC Board.
— ICC (@ICC) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
More here ⬇️https://t.co/3QcLinUPp0
">Sri Lanka Cricket suspended by ICC Board.
— ICC (@ICC) November 10, 2023
More here ⬇️https://t.co/3QcLinUPp0Sri Lanka Cricket suspended by ICC Board.
— ICC (@ICC) November 10, 2023
More here ⬇️https://t.co/3QcLinUPp0
இதற்கு முன்னதாக இலங்கை அணி தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் (SLC) முழுமையாகக் கலைக்கப்படுவதாகத் தெரிவித்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் (SLC) கலைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இலங்கை கிரிக்கெட் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை பெறப்பட்டது.
இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (நவ.10) முதல் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு இடைக்காலத் தடை விதித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை அணிக்குத் தடை விதித்தது தொடர்பாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு அறிவிப்பில், "கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் நாட்டின் தலையீடு, ஆட்சியாளர் தலையீடு இருக்கக் கூடாது. மேலும் கிரிக்கெட் வாரியம் தன்னாட்சியாகச் செயல்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் இலங்கை கிரிக்கெட் (SLC) மீறி இலங்கை அரசு தலையீடு உள்ளதால் இலங்கை அணியை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இலங்கை அணியின் இடைநிறுத்தம் குறித்த நிபந்தனைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். இலங்கை அரசின் தலையீடு இல்லாமல் இலங்கை கிரிக்கெட் (SLC) சுதந்திரமாகச் செயல்படும் வரை இந்த இடைக்காலத் தடை நீடிக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை அணியை இடை நீக்கம் செய்த அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணியின் கேப்டன் யார்? சூர்யகுமார் யாதவ்? ருதுராஜ் கெய்க்வாட்?