ETV Bharat / bharat

Train Coach Booking: ரயில் பெட்டி அல்லது முழு ரயிலையும் முன்பதிவு செய்வது எப்படி? முழுத் தகவல்! - Train Coach Booking

How to book an entire train or coach in Indian Railway: குழு சுற்றுலா செல்பவர்கள் இந்திய ரயில்வேயில் எப்படி ஒரு ரயில் பெட்டி அல்லது முழு ரயிலையும் வாடகைக்கு எடுப்பது, அதுபோன்ற வசதி இந்திய ரயில்வேயில் உள்ளதா? என்பது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

IRCTC
IRCTC
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 4:37 PM IST

ஐதராபாத்: சுற்றுலாக்களை இன்புறச் செய்வது நாம் பயணிக்கும் வாகனங்களைப் பொறுத்தே அமைகிறது. அதிலும் குழு சுற்றுலாக்களில் நாம் செல்லும் வாகனங்களே, நாம் சுற்றுலாவை எந்த அளவு உற்சாகத்துடன் கொண்டாடப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் இந்திய ரயில்வே, குழு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

குழு சுற்றுலாக்கள் செல்பவர்களுக்கு ஏதுவாக ஒரு பெட்டி முதல் 18 பெட்டிகள் வரை இந்திய ரயில்வே வாடகைக்கு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி ஐஆர்சிடிசி மூலம் முழு ரயில் அல்லது தனிப்பட்ட வகையில் பெட்டியை முன்பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டணம், முன்பதிவு வழிகாட்டு நெறிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் உள்பட ஐஆர்சிடிசியில் முழு ரயில் அல்லது ஒரு பெட்டியை முன்பதிவு செய்யத் தேவையான தரவுகளைப் பெற ஐஆர்சிடிசி முழு கட்டண சேவை என அழைக்கப்படும் IRCTC FTR என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த IRCTC FTR இணையதளத்தில் வணிக பயன்பாட்டுக்கான ரயில் அல்லது ஒரு பெட்டியை மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் இந்த ரயிலுக்கான பயணத்தைச் சுற்றுலாப் பயணிகள் எளிதில் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், தனிப்பட்ட ரயில் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் போது, 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ரயில் நிறுத்தப்படும் நிலையங்களில் மட்டுமே சுற்றுலா ரயில் பெட்டியை மற்ற இணைப்பு ரயில்களுடன் இணைக்கவோ அல்லது பிரிக்கவோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிமிடங்களில் ரயில் நின்று செல்லும் சாதாரண மற்றும் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் இந்த சிறப்புச் சுற்றுலா பெட்டிகளை இணைக்க முடியாது எனக் கூறப்பட்டு உள்ளது. IRCTC FTR மூலம் அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு முன்னும், குறைந்தபட்சமாக 30 நாட்களுக்குள் பயணத் தேதி நிர்ணயிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை: தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளைப் பொறுத்து, ஒரு ரயிலில் அதிகபட்சமாக 2 பெட்டிகள் வரை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் முழு கட்டண ரயில்களில் இரண்டு சிலிப்பர் படுக்கை வசதி மற்றும் ஜெனரேட்டர் கார் வசதி உள்பட அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை முன்பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் முழு கட்டண ரயில்களில் குறைந்தபட்சமாக 18 பெட்டிகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால் பெரிய அளவிலான சுற்றுலா நிறுவனங்கள், திருமண நிகழ்வுகளை நடத்தும் நிறுவனங்கள் மட்டுமே இது போன்ற முன்பதிவுகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு மற்றும் கட்டண விவரங்கள் : மொத்தமாக முன்பதிவுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், பெட்டிகளின் பயண விவரங்கள் மற்றும் வழி உள்படப் பிற விவரங்களை ஆன்லைன் மூலம் பெறப்படும் படிவத்தில் பதிவு மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரயில் பெட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.