பாகல்கோட்: கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த புஜபலி (34) என்பவர், ஷத்ரிய சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் வெளியூரில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. அண்மையில் இளம்பெண்ணின் பெற்றோரையும், தம்பதியினரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்ததையடுத்து, தம்பதியினர் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு புஜபலி, ஹனுமன் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புஜபலியின் மாமனாரான தம்மனகவுடா பாட்டீல், புஜபலியின் மீது மிளகாய்ப்பொடியை தூவி பின்னர் கத்தியால் குத்தியுள்ளார். மருமகனை குத்திக்கொலை செய்த பிறகு, தம்மனகவுடா போலீசில் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது!