மண்டி : இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கோல் அணையில் மோட்டார் படகில் 10 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் படகில் பழது ஏற்பட 10 பேரும் கோல் அணையின் நடுவே சிக்கி கொண்டனர். இச்சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு (NDRF) தகவல் கிடைக்க உடனடியாக 14 மீட்பு படையினருடன் சென்று அணையின் நடுவே சிக்கிய 10 பேர்களையும் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
மோட்டார் படகில் பழுது ஏற்பட கோல் அணையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் 10 பேர்களும் சிக்கி இருந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 14 பேர் கொண்ட குழு ஸ்டீமர் படகில் இரவு 8.30 மணிக்கு தேடுதல் பணியினை தொடங்கி இரவு 12.15 மணிக்கு அணையின் நடுவே சிக்கிய 10 பேர்களையும் கண்டுபிடித்தனர்.
அதன் பின்பு மீட்பு படையை சேர்ந்த வீரர் தனது உயிரை பணையம் வைத்து அணையில் குதித்து நீச்சல் அடித்து பழுதடைந்த படகிற்கு சென்று இரண்டு படகுகளையும் ஓன்று இணைத்து அணையில் சிக்கிய 10 பேர்களையும் பத்திரமாக மீட்டதாக தேசிய போிடர் மீட்பு படையை சேர்ந்த நபர் தொிவித்து உள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் அணையில் சிக்கிய 10 பேர்களை தேடும் பணியில் இரவு 8.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணியளவில் 10 பேர்களையும் பத்திரமாக மீட்டனர். அணையில் சிக்கிய 10 பேர்களில் 5 பேர்கள் வனத்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலப் பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநில அரசு வழங்கி உள்ள தகவலின் படி ஜுன் 24ஆம் தேதி முதல் தற்போது வரை இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பண இழப்பு 8 ஆயிரத்து 14 கோடியே 61 லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில், 2 ஆயிரத்து 22 வீடுகள் முழுமையாகவும் 9 ஆயிரத்து 615 வீடுகள் ஓரு குறிப்பிட்ட பகுதிகளிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களில் மட்டும் 117 உயிரிழந்துள்ளனர். பருவமழை காரணமாக 224 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு தொிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 17 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன மேலும் சடலங்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர் என தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கவிந்த பேருந்து: 8 பேர் பலி; 27 பேர் படுகாயம்!