ETV Bharat / bharat

ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த ஜெய்ராம் தாக்கூர்!

author img

By

Published : Dec 18, 2020, 12:39 PM IST

சிம்லா: இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அரசின் கொண்டாட்ட விழாவில் கலந்துகொள்ளுமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Himachal CM meets Rajnath Singh
Himachal CM meets Rajnath Singh

இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான அரசு, மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. ஜெய்ராம் தாக்கூர், கடந்த 2017 டிசம்பர் 27ஆம் தேதியன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான அரசின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு, இந்தாண்டு ஆன்லைன் மூலம் மெய் நிகர் முறையில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவல் காரணமாக, அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இவ்விழா நடைபெறவுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், விழாவில் கலந்துகொள்ளுமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் இன்று(டிச.18) நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்திற்கும், மக்களுக்கும் ஆதரவை வழங்கிய மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

பின்னர், மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் வெற்றிகரமாக மூன்றாண்டுகளை நிறைவு செய்ததற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

யார் இந்த ஜெய்ராம் தாக்கூர்:

இமாச்சல பிரதேச மாநிலத்தில், கடந்த 2017 ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, பாஜக வெற்றி பெற்றது. 68 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில் 44 பாஜகவும், 21 காங்கிரஸ் பெற்று முதலமைச்சராக, பாஜக மூத்த தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் சட்டப்பேரவைக்கு 5 ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 2006 முதல் 2009 வரை பாஜக மாநிலக் குழுத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். கடந்த 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.