ETV Bharat / bharat

ஹிஜாப் விவகாரம்; மத உடைகளுக்கு தடை, சீருடைக்கு மட்டுமே அனுமதி- கர்நாடக அரசு உத்தரவு!

author img

By

Published : Feb 6, 2022, 1:05 PM IST

கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் மத உடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும், சீருடைக்கு மடடுமே அனுமதி அளிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹிஜாப்புக்கு தடை ; கர்நாடக அரசு உத்தரவு!

பெங்களூரு: கர்நாடக அரசின்கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளுக்கு அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் காவித் துண்டு அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக கல்வித் துறை விடுத்துள்ள அறிக்கையில், “அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார்ப் பள்ளி மாணவர்கள் அப்பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தலின் படி ஆடை அணியலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் உள்ள கல்லூரிகளின் முடிவுகளை எடுக்கும், கல்லூரிகள் வளர்ச்சி வாரியமானது கூறுகையில் ‘ சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்காத வகையில் மாணவர்கள் ஆடைகளை அணியலாம்" எனத் தெரிவித்துள்ளது.

உடுப்பியில் தொடங்கிய சர்ச்சை

இதற்கு முன்னதாக உடுப்பியில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை கோரி சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சிக்கமகளூருவிலும் ஒரு பள்ளியில் இதே போன்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் ஹிஜாப்க்கு ஆதரவு தெரிவித்த வேளையில், பாஜகவினர் கர்நாடகாவில் தாலிபானியத்திற்கு அனுமதி இல்லை எனச் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை!- காங்கிரஸ் எம்.எல்.ஏ!

கர்நாடகா கல்புர்கி வடக்கு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கனீஸ் பாத்திமா ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கனீஸ் பாத்திமா தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சில முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களது போராட்டத்தில் “ ஹிஜாப் எங்களது உரிமை! கொடுமைப்படுத்த இது இடமில்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும்” போன்ற கோஷங்களை இட்டு போராட்டம் செய்தனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனீஸ் பாத்திமா
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கனீஸ் பாத்திமா

இதனையடுத்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கனீஸ் பாத்திமா கூறுகையில், “ நான் சட்டப்பேரவையில் ஹிஜாப் அணிந்து தான் அமருவேன், தைரியம் இருந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

பாஜகவின் சர்ச்சை கருத்து

கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சினை நாடு முழுவதும் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. மேலும் பாஜக முக்கிய தலைவர்கள் ஹிஜாப் தொடர்பாகச் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பாஜக கர்நாடக மாநில தலைவர் நலின் குமார் கடீல் கூறுகையில், “கல்வி நிலையங்கள் தாலிபானியத்திற்கான இடம் கிடையாது.

இதற்கு அரசு ஒரு போதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் பெண்கள் புர்கா அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக கர்நாடக மாநில தலைவர் நலின் குமார் கடீல்

பத்திரிகையாளர்களிடம் பேசிய நலின், ‘ இது போன்ற விசயங்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை. பள்ளி நிறுவனங்களில் கல்வி கற்கவே மாணவர்கள் வர வேண்டும், தாலிபானியத்தை அரசு ஒரு போதும் ஏற்காது. பள்ளிகள் சரஸ்வதியின் கோயில்கள் இங்கு ஹிஜாப் போன்ற விஷயங்களுக்கு அனுமதி கிடையாது. மாணவர்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ எனக் கூறினார்.

ஹிஜாப் வேண்டுமென்றால் பாகிஸ்தான் சென்று விடுங்கள்!

விஜயபுரா பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னால் மிகவும் சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நீங்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குச் செல்ல விரும்பினால் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள். அதற்கு இந்த மண்ணில் அனுமதி இல்லை. சிலர் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பர்தா அணிந்து வர அனுமதி கேட்பார்கள்.பள்ளிக்குள் மசூதி கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடரும். இது போன்றவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் தான் உண்மையான துரோகிகள்” எனக் கூறியுள்ளார். மாநிலத்தில் அமைதியைச் சீர்குலைப்பதில் சில தேச விரோத சக்திகளின் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ளதாகக் கூறினார்.

கல்வி நிறுவனங்களில் விநாயகப் பெருமானை வழிபடுவது குறித்தும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் நெற்றியில் குங்குமம் இடுவது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இது இந்தியா, நமது நாடு இந்தியக் கலாசாரத்தின் அடிப்படையில் உருவானது. அவர்கள் ஹிஜாப் அணிவது வேறு மார்க்கம்" என கூறுகிறார்.

சித்தாராமையா “சித்தா ரஹீம்” ஆக மாறுவார்; பாஜக எம்பி

ஹிஜாப் அணிவது தொடர்பாக சித்தராமையா கூறியதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா,

நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா
நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தனது வசதிக்காக அரசியல் செய்கிறார் என்று கூறினார். அடுத்த தேர்தலை முன்னிட்டு, சித்தராமையா என்ற தனது பெயரை 'சித்தா ரஹீம்' என மாற்றிக் கொள்வார். என்றார்

இதையும் படிங்க:கர்நாடகாவில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.