ETV Bharat / bharat

Hijab Issue: 'ஆர்எஸ்எஸ் கலாசாரத்தை கல்வி மையங்களில் பரப்பாதீங்க!' - புதுச்சேரி சபாநாயகர்

Hijab Issue: புதுச்சேரி பள்ளிகள் மூலமாக ஆர்எஸ்எஸ் கலாசாரத்தை புதுச்சேரியில் நுழைக்கும் வேலைக்கு கல்வி அமைச்சர் தூண்டுகோலாக இருக்கிறார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
author img

By

Published : Feb 10, 2022, 5:05 PM IST

புதுச்சேரி: அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் (Hijab Issue) இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்த மாணவிக்கு அனுமதி மறுத்ததற்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி மூலம் தனது கண்டத்தைப் பதிவுசெய்திருந்தார்.

இது தொடர்பாக அவர் அதில், "புதுச்சேரியில் இரு நாள்களுக்கு முன்பு அரியாங்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது.

கலாசார உரிமை உண்டு

எல்லா மதத்தினருக்கும் அவர்களது மதத்தினுடைய கோட்பாடு, கலாசாரத்தை கடைப்பிடிக்க உரிமை உண்டு. இதைப் பற்றி கேள்வி கேட்க எந்த அரசு அலுவலர்களுக்கும் உரிமை கிடையாது.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தால் போராட்டம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையை இங்கு உருவாக்கக் கூடாது.

புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் எதற்கு?

மேலும், வாதானூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. கல்வித் துறை அமைச்சரான நமச்சிவாயம் தொகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆர்எஸ்எஸ் கலாசாரத்தைப் பள்ளிகள் மூலமாகப் புதுவையில் நுழைப்பதற்கான வேலையை பாஜக மறைமுகமாகச் செய்கிறது.

அதற்கு அந்தத் துறை அமைச்சர் தூண்டுகோலாக இருக்கிறார். கல்வித் துறையை முதலமைச்சர் ரங்கசாமி தன் கையில் எடுத்துக் கொண்டு இவ்விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவு தந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்களது தொகுதியில் எந்தவித வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை என்று பேரவைத் தலைவரையும், ஆளுநரையும் சந்திப்பதுமாக உள்ளனர். இது பாஜகவுக்கும், சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் உள்ள பிரச்சினை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது சம்பந்தமாக முதலமைச்சரிடம்தான் முறையிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு அழகல்ல

அவர் மேலும் இது குறித்து கூறும்போது, "எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பிறகு பாஜக அலுவலகத்துக்குச் செல்வதும், பாஜக போராட்டங்களில் கலந்துகொள்வதும் பேரவைத் தலைவர் செல்வத்துக்கு அழகல்ல. அரசியல் செய்வது பேரவைத் தலைவருக்கு வேலையல்ல" என்று தெரிவித்தார்.

அவர் அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து பாஜக அரசியலைச் செய்யலாம். அதைவிட்டு விட்டு பாஜகவின் முகவராகச் செயல்படுவதை ஏற்க முடியாது என நாராயணசாமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தாயகம் வந்தடைந்த இலங்கையிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.