டெல்லி : கரோனா வைரஸின் புதியவகை வரவான ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கரோனா பெருந்தொற்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாளில் 58 ஆயிரத்து 97 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆக தற்போது பாதிப்பு 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
இதற்கு மத்தியில் நாடு முழுக்க ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (465), ராஜஸ்தான் மற்றும் கேரளா (234) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. நாட்டில் தற்போது கரோனா பெருந்தொற்று மூன்றாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 206 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 325 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
அந்த வகையில் இதுவரை உயிரிழப்புகள் 4 லட்சத்து 82 ஆயிரத்து 876 ஆக உள்ளது. பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் மருத்துவர் பாரதி பிரவின் பவார் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் நாட்டில் தொடர்ச்சியாக பல்வேறு தலைவர்கள் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஸ்டான்லி மருத்துவமனையில் 300 படுக்கைகள் தயார்