ETV Bharat / bharat

புதுச்சேரி மத்திய சிறை ஆசிரமம் போல் அழகாக உள்ளது: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் - ஆசிரமம் போல் அழகாக உள்ளது

புதுச்சேரி மத்திய சிறை ஆசிரமம் போல் அழகாக உள்ளதாக என சென்னை உயர்தீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மத்திய சிறை ஆசிரமம் போல் அழகாக உள்ளது: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

author img

By

Published : Jul 10, 2022, 5:55 PM IST

புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மன அழுத்தத்தை போக்கவும் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிறைச்சாலைக்குள் யோகா, நடனம் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதையும் தாண்டி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே செல்லும் கைதிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு ஏக்கரில் கைதிகளுக்கு விவசாயம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி கைதிகள் சிறைச்சாலைக்குள் வாழைமரம், பலா, காய்கறிகள், பழ வகைகள், செடிகள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனை அறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு சென்றார்.

புதுச்சேரி மத்திய சிறை ஆசிரமம் போல் அழகாக உள்ளது: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அப்போது சிறைச்சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளை சென்று பார்வையிட்ட அவர் கைதிகள் உருவாக்கியுள்ள விவசாய தோட்டங்களையும் பார்வையிட்டு ஆச்சரியமடைந்தார். மேலும் கைதிகளிடம் அவர்கள் செய்யும் விவசாய முறைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களை பாராட்டினார். தொடர்ந்து விவசாயிகள் புதிதாக பயிர் செய்துள்ள பழத்தோட்டங்களை திறந்து வைத்தார். இந்த பழத்தோட்டங்களில் பட்டர் ஃப்ரூட், டிராகன் பழம், திராட்சை, காபி, தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளின் செயல்பாட்டை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும், நீங்கள் எங்கு சென்று வந்தீர்கள் என்று என்னை யாரேனும் கேட்டால் நான் புதுச்சேரியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்று வந்தேன் என்று கூறுவேன் என கூறினார்.

மேலும் இங்கு 68 வகையான பழம், காய்கறி உள்ளிட்ட செடி வகைகள் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. என்றும், இங்குள்ள சிறைக் கைதிகள் இந்த விவசாய முறையை தொடர்ந்து செய்து வந்தால் அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும் என கூறினார்.

மேலும் கைதிகள் தன்னை தானே தனிமையில் இருந்து குழப்பிக்கொள்வதில் இருந்து மாறி இயற்கை சூழலுடன் இருந்தால் தவறுகள் ஏதும் பெரிதாக நடைபெறாது என்று அவர் கூறினார். இயற்கையை விட்டு வெகு தொலைவில் வருவதால் தான் தவறுகள் அதிகமாக செய்கிறோம் என்றும், தற்போது இங்கு சிறையில் உள்ள அதிகாரிகள் இவர்களை மீண்டும் இயற்கை சூழலுக்கு கொண்டு செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் சிறைக்கதிகள் திருந்தி அவர்கள் எதிர்காலம் நன்மையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ளது போன்ற சூழல் அனைத்து சிறைச்சாலைகளிலும் அமைய வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கின் போது வருபவர்களை குற்றவாளிகளாக, கைதிகளாக பார்த்துவிட்டு சிறைச்சாலையில் வந்து அவர்களது வாழ்க்கை முறையை பார்க்கும் போது நமக்கே ஒரு தெளிவு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் ஏதே ஒரு சூழ்நிலையில் குற்றம் செய்தவர்களை இந்த சமூகம் தள்ளி வைக்கக்கூடாது என்றும், இந்த சமூகம் அவர்களை திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சூழ்நிலையை சிறைச்சாலைகள் ஏற்படுத்த வேண்டும் என ஆனந்த் வெங்கனேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க:BSNL இணைப்பகம் திருட்டு - வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்ட 2 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.