ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு 15 மாவட்டங்களில் அதிகம் - தமிழ்நாட்டில் கரோனா

தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச்செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர்
மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர்
author img

By

Published : Jul 6, 2021, 7:34 PM IST

கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்துவருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் என தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துவருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் மொத்த கரோனா தொற்று பாதிப்பில் 80 விழுக்காடு மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.2 விழுக்காடாக உள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

இரண்டாவது அலையின் தாக்கம் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னும் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் தெரிவித்துள்ளார்.

மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்வோர் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் 24 விழுக்காடு பேர் முகக்கவசம் அணிவதில்லை என தெரியவந்துள்ளது.

ஏறத்தாழ 45 விழுக்காடு பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை. 63 விழுக்காடு பேர் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. 25 விழுக்காடு பேர் பயணங்களின்போது கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரளா - தமிழ்நாடு எல்லையில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.