டெல்லி: நவம்பர் முதல் வாரத்தின் நான்காம் மற்றும் ஐந்தாம் தேதிகளில் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வாரத்தின் காலநிலை குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 27ஆம் தேதி வெப்பநிலை பூஜ்யத்துக்கு சென்றது. மகாராஷ்டிராவின் வடபகுதிகளான நாசிக் உள்ளிட்ட இடங்களில் லா நினா காரணமாக மிதமான குளிர் காலநிலை நிலவும். அங்கு இதமான காலநிலையை நிலவும்.
டெல்லியை பொறுத்தமட்டில் கடந்த மாதம் (அக்டோபர்) கடந்த 58 ஆண்டுகளாக இல்லாத வகையில் இரவு நேரங்களில் குளிர் வாட்டியது. இதே காலநிலை வரும் நாள்களிலும் நீடிக்கும்.
டெல்லியின் சப்தார்ஜங் பகுதியில் உச்சப்பட்சமாக 17.2 குளிர் காலநிலை நிலவியது. பஞ்சாப்பின் லூதியானா, புனே, டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் 14.3 டிகிரி குளிர் காலநிலை நிலவியது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்கள் முறையே மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி ஆகும். இங்கு நவ.4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கன மழை பெய்யக்கூடும்" எனக் கூறப்பட்டுள்ளது.