புதுச்சேரி: காவல் துறையில் பணியிலிருந்தபோது இறந்த காவலர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தும் தினமாக நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திபெத் எல்லையில் 1959-ம் ஆண்டு நடந்த சண்டையின் போது எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீரமரணமடைந்தனர், அதில் பலர் காணாமலும் போனார்கள். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ம் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை காவல் மைதானத்தில் நடைபெற்ற காவலர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு காவலர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் காவல் துறை துணைத் தலைவர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போலீசார் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்