இரண்டாம் கட்ட நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஐந்து மசோதாக்களை மத்திய அரசு இன்று மக்களவையில் அறிமுகம் செய்யவுள்ளது. கரோனா காலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவுள்ளார்.
ரயில்வே, கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பநலன் உள்ளிட்ட அமைச்சகங்களின்கீழ் ஒதுக்கப்படும் நிதி குறித்தும் மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது. தேசிய தலைநகர் பகுதி டெல்லி அரசின் சட்டத்திருத்தம் 2021 என்ற மசோதாவை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்யவுள்ளார்.
பொதுக் கணக்குக் குழு, உள் துறை, போக்குவரத்து, சுற்றுலா ஆகிய அமைச்சகங்களின் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அறிக்கைகளும் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படவுள்ளன. சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள், மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று சட்டத்திருத்தத்தை மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி இன்று அறிமுகம் செய்யவுள்ளார்.