ETV Bharat / bharat

2030 ஆண்டுக்குள் 30% எலக்ட்ரிக் கார்கள் - நிதின் கட்கரி இலக்கு - ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

2030 ஆண்டுக்குள் நாடு முழுவதும் 30 விழுக்காடு எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை கொண்டுவர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari
Nitin Gadkari
author img

By

Published : Oct 8, 2021, 10:36 PM IST

ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிக்கி(FICCI) அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுப் பேசினார். அதில் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டம் குறித்து முக்கிய கருத்துக்களை கூறினார்.

அவர் பேசுகையில், "நாட்டின் 40 விழுக்காடு இருசக்கர வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் பட்சத்தில், இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 15 கோடி டன் குறையும். இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி.

நாட்டின் வாகனத்துறையால் கார்பன் வாயு வெளியேறும் அளவை குறைக்க வேண்டிய முக்கியத் தேவை எழுந்துள்ளது. பொருளாதாரம், சூழலியல் என்ற பார்வையில் இந்நடவடிக்கை அவசியம் ஆகும்.

நிதி ஆயோக் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 25 மாநிலங்கள் இந்த எலக்ட்ரிக் வாகன கொள்கைத் திட்டத்தில் சேர முனைப்புக் காட்டியுள்ளன. இவற்றில் 15 மாநிலங்கள் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

எனவே, அரசு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு கார்களையும், 40 விழுக்காடு பேருந்துகளையும், 80 விழுக்காடு இரண்டு, மூன்று சக்கர வாகனங்களையும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.