நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ் உள்ளிட்ட போக்குவரத்துச் சார்ந்த ஆவணங்களின் வேலிடிட்டியைப் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதற்கான அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி 2020 பிப்ரவரி 1ஆம் தேதியுடன் வேலிடிட்டி நிறைவடையும் ஆவணங்கள் அனைத்துக்கும் 2021ஆம் ஆண்டு மார்ச் 31 வரை உரிமக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை தற்போது ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் மக்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உ.பி.யில் 4 கட்டங்களாகப் பஞ்சாயத்துத் தேர்தல் - மாநிலத் தேர்தல் ஆணையம்