தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் , தண்டலப்பள்ளி மண்டலம் அருகே வெமுலாப்பள்ளி பகுதியில் பந்துலு தாண்டா அரசுப் பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துவிட்டதால் பள்ளியில் பயின்று வந்த மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்தது. மேலும் கரோனா பேரிடரின் காரணமாக பள்ளி 3 ஆண்டுகள் மூடப்பட்டதால் ஆசிரியர்களும் மேலும் சில மாணவர்களும் பள்ளியை விட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகிறது. 4 மாணவர்கள் மட்டுமே தினசரி வகுப்புகளுக்கு வந்தாலும் இரண்டு ஆசிரியர்கள் நம்பிக்கை இழக்காமல் அவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். மேலும் தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களைச் சந்தித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே உடல் நலக்குறைவால் ஒரு மாணவர் பள்ளிக்கு வருவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியைச் சந்தித்தார் திரௌபதி முர்மு!