ETV Bharat / bharat

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்த பிரதமர் மோடி!

author img

By

Published : Jul 30, 2023, 11:17 AM IST

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசினார். முரளி மனோகர் ஜோஷியின் வழிகாட்டுதலும் ஆசியும் கிடைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Got blessings
பிரதமர்

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று(ஜூலை 29) பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மரியாதைக்குரிய மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வழிகாட்டுதலும் ஆசியும் கிடைத்தது என்றும், தன்னைப் போலவே பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகிக்கும் அவரைச் சந்தித்த பிறகு ஒரு புதிய உத்வேகம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, டெல்லியில் அகில பாரதிய சிக்‌ஷா சமாஜம் என்ற அகில இந்திய கல்வி மாநாடு தொடங்கியது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த அகில இந்திய கல்வி மாநாடு நடத்தப்படுகிறது. பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கல்வி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, சுபாஸ் சர்க்கார், ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர், அங்கு வந்திருந்த பள்ளிக்குழந்தைகள், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட்டு, அதில் பங்கேற்ற குழந்தைகளைப் பாராட்டினார்.

பின்னர், மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "தேசிய கல்விக் கொள்கை 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கப் போகிறது. இதன் மூலம் நமது நாட்டின் எதிர்காலத்தை கட்டி எழுப்புவதற்கான அடித்தளம் அமைக்க பங்களிக்கிறோம்.

தேசத்தின் தலைவிதியை மாற்றும் சக்தி கல்விக்கு உண்டு. நாட்டின் முன்னேற்றத்தில் கல்விக்கு முக்கியப் பங்கு உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தாய்மொழிக் கல்வியால் மாணவ, மாணவியருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இது சமூக நீதிக்கான முக்கிய படிக்கல்.

உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தாய்மொழியை மட்டுமே பயன்படுத்துகின்றன. நமது நாட்டில் வளமான மொழிகள் இருந்தும், நமது மொழிகளைப் பின்தங்கிய மொழியாகக் கருதுகிறோம். ஒருவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், அவரது திறமை ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நிதிஷ் குமார் எங்களில் ஒருவர்... பாஜக கூட்டணியில் விரைவில் இணைவார்... - ராம்தாஸ் அத்வாலே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.