ஒரு சர்வதேச டேட்டிங் தளத்தில் மேற்கு வங்க மாநிலம் பாண்டுவா பகுதியைச் சேர்ந்த குந்தல் பட்டாச்சார்யா என்ற இளைஞரும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பேட்ரிசியாவும் சந்தித்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையே மெல்ல மெல்ல காதல் மலர்ந்தது.
முதலில், இருவருக்குமே மொழியைப் புரிந்து பேசிக் கொள்வதில் சிக்கல் நீடித்துள்ளது. இதற்காக இருவரும் கூகுள் டிரான்ஸ்லேட்டரைப் பயன்படுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு நாடு தாண்டி மலர்ந்த காதல், தற்போது திருமணம் செய்து கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளது.
மேலும் கடந்த ஜூலை 13 அன்று, தனது காதலியான பாட்ரிசியா, இந்தியா வந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை குந்தல் பட்டாச்சார்யாவுக்கு கொடுத்துள்ளார். தொடர்ந்து குந்தலின் வீட்டிற்கே பாட்ரிசியா சென்றுள்ளார். தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் நிலையில், முறைப்படி இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் மனைவிக்கு விவாகரத்து