ETV Bharat / bharat

’கோட்சேவின் தோட்டாக்கள் ஒன்றும் காந்தியைக் கொல்லவில்லை..!’ - நேதாஜியின் பேத்தி - நாதுராம் கோட்சே

நேதாஜியின் சிலையை ’இந்தியா கேட்’இல் நிறுவுவதற்கே இந்தியாவிற்கு 75 வருடங்கள் ஆகியிருக்கிப்பினும், அவருக்கு தகுந்த மரியாதையையே செய்துள்ளது, என நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளுப் பேத்தியான ராஜ் ஸ்ரீ சவுதரி போஸ் தெரிவித்துள்ளார்.

’கோட்சேவின் தோட்டாக்கள் ஒன்றும் காந்தியைக் கொல்லவில்லை..!’ - நேதாஜியின் பேத்தி

author img

By

Published : Sep 8, 2022, 10:30 PM IST

Updated : Sep 8, 2022, 10:47 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(செப்.8) இந்தியா கேட்டில் 28 அடி உயரமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை வரவேற்ற நேதாஜியின் கொள்ளுப் பேத்தியான ராஜ் ஸ்ரீசவுதரி போஸ், “நேதாஜியின் சிலையை இந்தியா கேட்டில் நிறுவ 75 வருடங்கள் அவகாசம் ஆகியிருந்தாலும் அது அவருக்கான சரியான மரியாதையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், அவரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் அன்னாரது தியாகத்தை ஆவணப்படுத்த வேண்டுமெனவும் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நமது ஈடிவிபாரத்திடம் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ]

கேள்வி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவச் சிலை டெல்லியில் நிறுவப்பட்டுள்ளது. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: சுதந்திரத்திற்காக உறுதியாக போராடிய, ’டெல்லி சலோ’ யாத்திரையில் பங்குபெற்ற ஒருவரின் சிலையை நிறுவ 75 ஆண்டுகள் அவகாசம் ஆகியுள்ளது. இருப்பினும், பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் இருந்த இடத்தில் தற்போது அவருக்கு சிலை நிறுவியிருப்பது அவருக்கான சரியான மரியாதை தான். இதன் மூலம் அரசாங்கம் நமது நாட்டின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் என்பதை நிரூபித்துள்ளனர்.

கேள்வி: இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் நேதாஜிக்கு தகுந்த மரியாதை செலுத்தாமல் இருந்தது குறித்து உங்களுக்கு ஏதேனும் புகார்கள் உள்ளனவா..?

பதில்: புகார்கள் நிச்சயம் உள்ளன. தற்போது நம் கோரிக்கை என்னவென்றால், உலகெங்கும் உள்ள நேதாஜி வாழ்க்கை ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய சுதந்திரத்திற்கு அவரது தியாகங்கள், பள்ளிப் பாடங்களில் சேர்க்கப்பட வேண்டும். வரலாற்றில் அவருக்கு சரியான இடம் இருக்க வேண்டும். இதற்கு, ரஸ்ஸியா, ஜப்பான், வியட்னாம், அமெரிக்கா, மொசம்பிக், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, மங்கோலியா, தாய்வான், வங்காளதேசம் போன்ற நாடுகள் தகவல்கள் மற்றும் ஆவணங்களை அளிக்க இந்த அரசால் அணுகப்பட வேண்டும்.

கேள்வி: சில அரசியல் கட்சிகள் இந்த அரசு பெங்காலிய உணர்ச்சிகளைக் கவரத்தான் நேதாஜி சிலையை நிறுவியதாகச் சொல்கிறார்களே..?

பதில்: நேதாஜி அகந்த பாரதத்தின் தலைவர். அவரை சிலர் பெங்காலி என சுருக்கப் பார்க்கிறார்கள். இது தவறு. காந்திஜி குஜராத்தி அல்ல அவர் இந்த நாட்டின் தந்தை. குஜராத் அவர் பிறந்த இடம், அவ்வளவே. மற்றும் நேதாஜி முதலில் பெங்காலிலேயே பிறக்கவில்லை. அவர் பிறந்தது ஒரிசாவில். அவரது தாய்மொழிதான் பெங்காலி. ஆகையால் அவரது சிலையை நிறுவியது பெங்காலிய உணர்ச்சிகளைக் கவர எனச் சொல்வதெல்லாம் அற்பமானச் செயலே.

கேள்வி: தனக்கு விழாவிற்கான அழைப்பு மத்திய அரசின் துணை செயலாளரால் வழங்கப்பட்டது விதிகளை மீறிய செயல் என்றும், அதனால் தான் இண்டஹ் நிகழ்வில் பங்குகொள்ளப் போவதில்லை என மேற்கு வங்கள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கூறியிருப்பது பற்றி?

பதில்: அவர் இந்த அரசு செய்யும் எல்லா நல்ல விஷயங்களையும் ஏதேனும் ஓர் காரணத்தை சொல்லி எதிர்க்கப் பார்க்கிறார், ஏனெனில் இவர் ஒரு நல்லதும் செய்வதில்லை. நேதாஜியின் சிலையை நிறுவும் நிலையில், இவர் மற்ற வேறுபாடுகளையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்த அரசின் முயற்சியைப் பாரட்டியிருக்க வேண்டும். மேலும், நேதாஜியின் சிலை கிங் ஜார்ஜ் சிலை இருந்த இடத்தில் நிறுவுவது எஞ்சியுள்ள காலனிய ஆதிக்கத்தை முறியடித்திருப்பதை குறிப்பால் சொல்லும் செயலே ஆகும்.

கேள்வி: நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு நாதுராம் கோட்சேவின் படத்தை வணங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையானதே..?

பதில்: ஆமாம், நான் செய்தேன். ஏனென்றால் நமது முன்னோர்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லை, அது காந்தியால் தான் நடந்தது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்ட அனைத்தையும் காந்தி வழங்கினார், வங்களத்திலும் பஞ்சாபிலும் பெண்களுக்கு நிகர்ந்த கொடூரம் காந்திக்குத் தெரியவில்லை.

இதனால் கோவம் அடைந்த கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார். காந்தியை ஒருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. கோட்சேவின் தோட்டாக்கள் காந்தியைக் கொல்லவில்லை. யாரோ பின்னால் இருந்து தான் காந்தியை சுட்டிருக்க வேண்டும் என்பது எனது குற்றஞ்சாட்டு.

கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து மூன்றாவது தோட்டா பாயவில்லை. அப்போதைய நேரு அரசு அந்த மூன்றாவது தோட்டா யாருடைய துப்பாக்கியிலிருந்து பாய்ந்தது என்று கண்டுபிடித்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: நல்லிணக்கம் வலுப்பெறட்டும் - பிரதமர் ஓணம் வாழ்த்து

Last Updated : Sep 8, 2022, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.