பனாஜி: இந்தாண்டு கோவா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி கோவாவில் பிப்.14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு 332 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதனிடையே பிப்.14ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவா அரசு, சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பிப்.14 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நாளில் அரசு, தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிங்க: வேலையில்லாதவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் - கெஜ்ரிவால் வாக்குறுதி