ETV Bharat / bharat

இந்து வன்முறை தடுப்பு - அமெரிக்காவில் இந்துபோபியா எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்!

ஜார்ஜியா மாகாணத்தில் அதிகளவில் இருக்கும் இந்து அமெரிக்கர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் குற்றங்களை கண்டித்து அங்கு இந்துபோபியா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 1, 2023, 1:31 PM IST

வாஷிங்டன் : அமெரிக்காவில் முதல் முறையாக இந்துகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் இந்துபோபியா தீர்மானம் ஜார்ஜியா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்துபோபியா மற்றும் இந்து மத எதிர்ப்பை கண்டித்து ஜார்ஜியா சட்டப் பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த தீர்மானத்தில், உலகின் பெரிய மற்றும் மிகப் பழமையான இந்து மதம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 120 கோடி மக்களால் பின்பற்றப்படுகிறது. ஏற்றுக்கொள்ளுதல், பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி ஆகிய மதிப்புகளைக் கொண்ட பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கை பண்புகளை உள்ளடக்கியது இந்து மதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜார்ஜியாவில் இந்து மற்றும் இந்திய அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் அட்லான்டா பகுதியில் நடத்தப்படும் இந்து எதிர்ப்பு தாக்குதல்களை கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த லாரென் மெக் டொனால்ட் மற்றும் டோட் ஜோன்ஸ் ஆகியோர் இந்த தீர்மானத்தை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தனர்.

மருத்துவம், அறிவியல், பொறியியல், ஐடி, வர்த்தகம், நிதி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்க - இந்து சமூகம் முக்கிய பங்கு வகிப்பதாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும், யோகா, ஆயுர்வேதம், தியானம் உள்ளிட்டவற்றில் இந்துக்களின் பங்களிப்பால் பல லட்சம் அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் பல ஆண்டுகளாக இந்து - அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு உணர்வு மற்றும் குற்றங்கள் நடந்து வருவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஜார்ஜியா சட்டப் பேரவையில் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி நீதித் துறை சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றுகூடி இந்துபோபியாவுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து தற்போது ஜார்ஜியா மாகாணத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை! 2008 மீண்டும் திரும்புகிறதா? இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.