ETV Bharat / bharat

மத்திய அமைச்சரவையில் மாற்றம்.. முழு விவரம்!

Changes in Central cabinet: சமீபத்தில் நடைபெற்று முடிந்த சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 9:58 AM IST

டெல்லி: கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. மிசோரமில் சோரம் மக்கள் இயக்கமும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.

இவற்றில், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். இதனையடுத்து, இவர்கள் மூவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், இவர்கள் மூவரும் வகித்து வந்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, நரேந்திர சிங் தோமர் வகித்து வந்த வேளாண் துறை, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஜல்சக்தி துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும், வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலேஜேவிடம் உணவு பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பழங்குடியினர் நலன், சுகாதார இணை அமைச்சர் பாரதி பவாரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ஆளுநரின் அதிகார வரம்பு என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.