லக்னோ : உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து ஜூன் 4ஆம் தேதி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவ குழுவினர் அவரை தீவிமாக கண்காணித்துவருகின்றனர். அவருக்கு ஏற்கனவே இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளன.
89 வயதான கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். முன்னதாக கோவிட் பாதிப்புகள் காரணமாக கல்யாண் சிங் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதையும் படிங்க : 'அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் என் கனவு நிறைவேறியது' - கல்யாண் சிங்