டெல்லி: இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். தலைமை தேர்தல் ஆணையருடன் இணைந்து இரு ஆணையர்கள் பணியாற்றுவார்கள். தேர்தல் ஆணையராக அனுப் சந்த்ரா பாண்டே உள்ள நிலையில், காலியாக இருந்த மற்றொரு ஆணையர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலை கடந்த சனிக்கிழமை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய கனரக தொழில்துறை செயலாளராக அருண் கோயல் பதவி வகித்தார். வரும் டிசம்பர் இறுதியில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்றார்.
விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலை, தேர்தல் ஆணையராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து உத்தரவு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Delhi | Arun Goel assumes charge as the new Election Commissioner of India. pic.twitter.com/4c85DsILgt
— ANI (@ANI) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi | Arun Goel assumes charge as the new Election Commissioner of India. pic.twitter.com/4c85DsILgt
— ANI (@ANI) November 21, 2022Delhi | Arun Goel assumes charge as the new Election Commissioner of India. pic.twitter.com/4c85DsILgt
— ANI (@ANI) November 21, 2022
பஞ்சாப் 1985 பேட்ஜை சேர்ந்த அருண் கோயல், இதற்கு முன் மத்திய கலாசாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதையும் படிங்க: மங்களூரு ஆட்டோ வெடிப்பு - இளைஞரிடம் விசாரணை