ETV Bharat / bharat

மாநிலங்களவையில் சதம் அடித்த பாஜக! - மாநிலங்களவையில் பாஜக பலம்

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் பலம் 101ஆக அதிகரித்துள்ளது.

BJP
BJP
author img

By

Published : Apr 2, 2022, 8:32 AM IST

புது டெல்லி : மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் பலம் 101ஆக அதிகரித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

அண்மையில் நடந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் நீங்கலாக பாஜக மாபெரும் வெற்றியை ருசித்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் பாஜகவுக்கு 13 உறுப்பினர்களும், ஆம் ஆத்மிக்கு 5 உறுப்பினர்களும் கிடைத்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் விடுதலை கட்சி (United People's Party Liberal - UPPCL) ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்களும் கிடைத்துள்ளன.

இதனால் 101 இடங்களுடன் பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக விளங்குகிறது. காங்கிரஸ் 29 உறுப்பினர்களாக சுருங்கியுள்ளது.

இந்த வெற்றி குறித்து ஈடிவி பாரத்துக்கு பாஜக மாநிலங்களவை கொறடா எம்.பி. ஷிவ் பிரதாப் சுக்லா கூறுகையில், “இது பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமைக்கு கிடைத்த வெற்றி. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.

மேலும் காங்கிரஸை விமர்சித்த அவர், “மக்களவையில் காங்கிரஸார் பாஜகவுக்கு ஒரு இடமா? இரண்டு இடமா? என்று ஏளனமாக பேசுவார்கள். இன்று வரலாறு திரும்பிவிட்டது” என்றார்.

இதையும் படிங்க : ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் ஹர்பஜன் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.