ETV Bharat / bharat

ஃபுட் டெலிவரியில் களமிறக்கப்படும் ட்ரோன்கள் - பப்ளிக் பர்ஃபீஷனல் ஸ்டடீஸ் கல்லூரி

லக்னோவை சேர்ந்த மாணவர்கள் சிலர், குறைவில் செலவில் ட்ரோன்களை தயாரித்து அசத்தியுள்ளனர்.

ட்ரோன்கள்
ட்ரோன்கள்
author img

By

Published : Aug 14, 2021, 11:59 PM IST

அங்க பாரு ஏதோ பறக்குதுனு அண்ணாந்து பார்க்கிற காலம் மலையேறி போயிடுச்சு. ட்ரோன்களுடன் இன்றைய தலைமுறையினர் விளையாடிக் கொண்டிருக்கிறனர். சினிமா படப்பிடிப்புகளில் ட்ரோன்களை பார்த்து வந்த நிலையில், தற்போது திருமண நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் காணமுடிகிறது. இப்போது ட்ரோனை ஃபுட் டெலிவிரியில் களமிறக்கிட திட்டமிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பப்ளிக் பர்ஃபீஷனல் ஸ்டீஸ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், குறைந்த செலவில் ட்ரோன்களை தயாரித்து அசத்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் டாக்டர் எல்.எஸ். அவஸ்தி கூறுகையில், " எங்கள் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த ட்ரோனுக்கு 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. ஆனால், இதே வசதிகளுடன் சந்தையில் விற்கப்படும் ட்ரோன்களின் விலை 2 முதல் 3 லட்சம் வரை இருக்கும்.

இந்த ட்ரோன்கள் குறிப்பிட்ட வரம்பு வரையிலே செயல்படும். அதை மீறும் பட்சத்தில், மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிடும். அதன் திறனை மேலும் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வரும் காலங்களில், ஒன்றிலிருந்து ஒன்றரை கிலோ எடையுள்ள பொருள்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இந்த ட்ரோன்களின் மூலம் கொண்டு செல்ல முடியும்.

புட் டெலிவரியில் களமிறக்கப்படும் ட்ரோன்கள்

கல்லூரி மாணவர்கள் ரஜத், அப்வயன் சின்ஹா ஆகிய இருவர்தான் இந்த ட்ரோனை தயாரித்தனர். இது தொடர்பாக இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தத் தயாரிப்பின் வணிக பயன்பாடு தொடர்பான அனைத்து சட்ட செயல்முறைகளும் நடைபெற்று வருகிறன. அதன் பிறகுதான் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

தற்போது, ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கேன சில வழிகாட்டுதல்கள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களானது ட்ரோன்களின் எடை, அளவிற்கு ஏற்ப வெவ்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

நானோ ட்ரோன்: இந்த ட்ரோன்களின் எடை 250 கிராமுக்கும் குறைவாக தான் இருக்கும். இதற்கு எவ்வித உரிமமும் தேவையில்லை.

மைக்ரோ ட்ரோன்: இந்த ட்ரோன்களின் எடை 200 கிராமுக்கு அதிகமாகவும், 2 கிலோவுக்கு குறைவாகவும் இருக்கும்.

குட்டி ட்ரோன்: இந்த ட்ரோன்களின் எடை 2 கிலோவுக்கு அதிகமாகவும், 25 கிலோவுக்கு குறைவாகவும் இருக்கும்.

மிடியம் ட்ரோன்: இதன் எடை 25 கிலோவுக்கு மேல் ஆனால் 150 கிலோவுக்கும் குறைவாகவும் இருக்கும்

பெரிய ட்ரோன்: 150 கிலோவைவிட அதிகமாக இருக்கும்.

நானோ வகையைத் தவிர மற்ற அனைத்து வகை ட்ரோன்களுக்கும் பறக்க உரிமம் தேவை. அனுமதியின்றி ட்ரோன் பறக்கும் போது ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படலாம். ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்ட இடத்தில் ட்ரோனை பறக்க செய்தால் ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 15 காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கம் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.