ETV Bharat / bharat

திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - பிரதமர் மோடி - பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு பாஜக பிரமுகர்களுக்கும், தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

பதான் சர்ச்சை போன்ற தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

author img

By

Published : Jan 18, 2023, 11:45 AM IST

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் பிற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் 2ஆவது நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அப்போது, பிரதமர் மோடி, பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் திரைப்பட சர்ச்சையை மேற்கோள்காட்டி, நாட்டில் திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு கட்சியின் தலைவர்களும், பிரமுகர்களுக்கும் அறிவுறுத்தினார்.

வரும் ஜனவரி 25ஆம் தேதி பதான் திரைப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக, டிசம்பரில் இந்த படத்தின் பேஷாராம் ரங் என்னும் பாடல் வெளியிடப்பட்டது. இதில் நடிகை தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில் படுகவர்ச்சியுடன் தோன்றினார்.

இந்த பாடலில் இந்து மதத்தின் காவி நிறத்தை சர்ச்சைக்குரிய வகையில் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் இருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பின. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்குகளும் தொடரப்பட்டன. அதோடு சமூக வலைதளங்களில் தீபிகா படுகோனே குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. குறிப்பாக, பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் பாடலுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சராக உள்ள பாஜகவின் நரோட்டம் மிஸ்ரா இந்த பாடலில் உள்ள ஆடைகளின் நிறம் ஆட்சேபனைக்குரியவை. மோசமான மனநிலையுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இதை மாற்றவில்லையென்றால், மத்தியப்பிரதேசத்தில் பதான் படம் வெளியாகாது என்று தெரிவித்தார். இப்படி பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரத்துக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் மோடி பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.