சிவான்: பீகாரில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. இந்த கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது. அந்த வகையில், சிவான் மாவட்டத்தின் பாலா கிராமத்தை சேர்ந்த 5 பேர் கள்ளச் சாராயம் குடித்து நேற்று (ஜனவரி 22) உயிரிழந்தனர்.
முன்னதாக 15-க்கும் மேற்பட்டோருக்கு கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கிராமத்திலேயே உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்கள் கிராம மக்கள் மருத்துவமனையில் கொண்டு சேர்ந்தனர். அதில் 4 பேர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள 10-க்கும் மேற்பட்டோரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே போலீசார் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றதாக 10 பேரை கைது செய்தள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்தனர். அதிலிருந்தே மாநிலம் மீள்வதற்குள் மீண்டும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: வீடியோ: பூரி கடற்கரையில் 6 டன் மணலாலான நேதாஜியின் உருவம்