ETV Bharat / bharat

நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக தவிர்க்க வேண்டிய சொற்கள் குறித்த கையேடு - உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை! - கையேடு வெளியிட்ட உச்சநீதிமன்றம்

Supreme Court Handbook: நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள், வாதங்களில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெண்களுக்கு எதிரான சொற்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தவிர்க்க வேண்டிய சொற்கள் மற்றும் அவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டிய சொற்கள் அடங்கிய கையேட்டையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

Supreme Court
கோப்பு
author img

By

Published : Aug 16, 2023, 4:47 PM IST

டெல்லி: நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் தவிர்க்கப்பட வேண்டிய சொற்கள் குறித்த கையேடு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 16) வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கையேட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டார். இந்த கையேட்டில், பொதுப்புத்தியில் பெண்களுக்கு எதிராக பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சொற்களை நீதிபதிகள் தங்களது உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சொற்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய சொற்களும் இதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் மட்டுமல்லாமல், வழக்கறிஞர்களும் இந்த கையேட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும், மனுக்கள் மற்றும் வாதங்களில் குறிப்பிட்ட சொற்களை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "பல நீதிமன்ற தீர்ப்புகளில் பெண்களுக்கு எதிராகவும், பெண்களைப் புண்படுத்தும் வகையிலும் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்புத்தியில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் இந்த சொற்கள் முறையற்றவை. இதுபோன்ற சொற்களை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளில் பயன்படுத்தப்பட்ட அந்த பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான சொற்கள் இந்த கையேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சொற்கள் தொடர்பாக நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

இந்த சொற்கள் கடந்த காலங்களில் நீதிமன்ற தீர்ப்புகளில் பயன்படுத்தப்பட்டவை. அந்த தீர்ப்புகளை விமர்சிப்பதோ அல்லது அந்த தீர்ப்புகள் குறித்து கேள்வி எழுப்புவதோ இந்த கையேட்டின் நோக்கம் அல்ல. மாறாக பெண்களுக்கு எதிரான சொற்கள் கவனக்குறைவாக கையாளப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டு காட்டுவதே நோக்கம்" என்றார்.

அதேபோல், "நாம் ஒவ்வொருவரும் நீதிபதிகளாகப் பதவி ஏற்கும்போது, அச்சம், தயவு அல்லது எந்தவித விருப்பு வெறுப்புக்கும் உட்படாமல் கடமையைச் செய்வோம் என உறுதி எடுத்துள்ளோம். அதன்படி, நீதி கோரி வருபவர்களுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சட்டத்தைப் பயன்படுத்தி நீதி வழங்க வேண்டும். அப்போது, எவற்றின் அடிப்படையிலும் முன்முடிவுகளுடன் செயல்படக் கூடாது" என்று கையேட்டின் முன்னுரையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த முன்னெடுப்பிற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்ற விசாரணைகளின்போதும், உத்தரவுகளின்போது பல நீதிபதிகள் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான சொற்களைப் பயன்படுத்தியுள்ள நிலையில், இந்த கையேடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.